Thursday, February 9, 2017

சொற்றுணை வேதியன்—SoTruNai vEdiyan

சொற்றுணை வேதியன்SoTruNai vEdiyan

Author/Composer: tirunAvukkarasar (appar)
tEvAram 4th tirumuRai; (4.1)


rAgam: kEdAragauLai (  paN: GAndAra panchamam) (பண்: காந்தார பஞ்சமம்)


For a discussion on PaN  visit  http://tamizisai.weebly.com/about-pans.html 
For a life history of the composer visit https://en.wikipedia.org/wiki/Appar

For a discussion of the song #1 visit http://www.tamilvu.org/slet/l5F31/l5F31s06.jsp?id=2302

MaruL nIkkiyAr left his elder sister (tilakavatiyAr) and joined the Jain monks after searching for a good religion to follow. He studied Jain religion and its literature extensively. He spent a few years with the Jain monks. In the mean time his sister (who was a staunch devotee of Lord Shiva) prayed to the lord to let her brother return to his hometown and follow shaivaism. It appears the lord inflicted a severe gut pain on maruL nIkkiyAr which the Jain monks couldn’t cure. Then he abandoned the Jain monks. The monks would not take it lightly and caused him lots of troubles (with the permission of the king) such as placing him in a lime kiln, poisoning his food, letting him crushed by an elephant, and finally tying him to a stone and throwing him in the sea. MaruL nIKKIyAr survived all such punishments miraculously. At the end he came to his sister who gave him the sacred ash and asked him to worship at the local Shiva shrine. At that time he sang 10 songs on the lord at tiruvatigai shrine. Let us consider 4 songs from the tirumuRai patigam (4.11) below.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்                                                                பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்                                                          கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்                                                        
நற்றுணை யாவது நமச்சி வாயவே.                  4.11.1
Meaning in Thamizh for all the songs below                                        (Source: http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=4011

Meaning in Thamizh: வேதமான வாசகத்திற்கு நிகரான வாக்கியப் பொருளாக உள்ளவனாய்ப் பரஞ்சோதியாகிய அழியாத வீட்டுலகினனாய் உள்ள எம்பெருமானுடைய, பொலிவுடைய, தமக்குத்தாமே இணையான சேவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுதலால் கல்லைத் துணையாகச் சேர்த்து அதனோடு இணைத்துக் கடலில் தள்ளிவிட்டாலும் எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தே நமக்குப் பெரிய துணையாகும் .

Meaning in English: By worshipping the holy feet of the effulgent lord whose utterance is vEdam,  one can survive any punishment including being tied to a stone and thrown in the sea (referring to his punishment at the hands of the Jain monks). The five-letter word “na ma si va ya” is the one which will be a lifetime refuge.

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்டமில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே                                             4.11.2

Mening in Thamizh: பூக்களுக்குள் விலைமதிப்பரிய ஆபரணம் இதழ்கள் மிக்க தாமரையாகும் . பசுக்களுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் சிவபெருமான் அபிடேகத்துக்குப் பஞ்சகவ்வியம் உதவுதல் . அரசனுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் செங்கோல் வளையாமல் ஆட்சி செய்வதாம் . நாவினுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் திருவைந்தெழுத்தேயாகும் 
.
Meaning in English:  Among flowers, lotus with its numerous petals is the most precious.  The redeeming feature of the cows is the products they give for propitiating lord Shiva.  The invaluable characteristic of a king is to rule his citizens with fairness and justice. The precious word that the tongue can utter is “na ma si vA ya”

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
                          4.11.8

Meaning in Thamizh: வீட்டில் உள்ள விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்குவதாம். சொல்லின் அகத்து நின்று விளக்குவதாய் , ஒளியுடைய தாய் , பல இடங்களையும் விளக்குவதாய்ப் பல சமயத்தாரும் தம்மை அறியாமலே காண நிற்பதாய் ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப் போல ஒளியை நல்குவது திருவைந்தெழுத்து மந்திரமே .

Meaning in English: At home the lamp eliminates darkness. Likewise the five letters “na ma si vA ya” enlighten the various words, various places and all other good incidents,

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
                   4.11.10

Meaning in Thamizh: மான்குட்டியைக் கையிலேந்திய , பார்வதி பாகனுடைய பூமாலைகள் சார்த்தப்பெற்ற திருவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுவதற்கு நாவை இணைந்து தழுவிய திருவைந்தெழுத்தைப் பற்றிய இப்பத்துப்பாடல்களை வழிபட வல்ல அடியவர்களுக்கு எத்தகைய துயரங்களும் ஏற்படமாட்டா .

Meaning in English: 4.11.10: The song above is a phalastuti. It details the benefit that accrues to the devotee who recites the 10 songs. The gist of the song: If you worship the holy feet (adorned with flowers) of the lord who bears the goddess PArvati on his left side and carries a deer in his hand, and utter the 5-letter word na-ma-si-vA-ya  you won’t face any troubles.
Audio and video clips

Listen to Gayathri Girish here   (sings songs 1.2, 8, and 10 listed above)
https://www.youtube.com/watch?v=ZwDi95zKsb8   (All the 10 songs in the patigam are sung here by a devotional OdhuvAr)
https://www.youtube.com/watch?v=Yr31wQ8hBuU (All the 10 songs are sung here)
MKThyagaraja Bhagavathar  sings here  ( Song #1 only from the movie SivakAmi)

Return of maruLnIkkiyAr to his hometown.

Background: When maruLnIkkiyAr (prior name of appar) decided to desert the Jain religion when the Jain monks couldn’t cure his intense colic pain, he  returned to tiruvatigai vIraTTAnam on the banks of the GeDila River where his sister lived and begged her pardon for going away from shaivism (of which she was a devotee). She gave him some sacred ash and asked him to worship lord Shiva. This is the very first song that he sang to receive the grace of Lord Shiva. After he sang 10 songs his colic pain disappeared and he became a shaivite devotee and earned the moniker tirunAvukkarasar.

 Shrine: tiruvatigai vIraTTAnam (திரு அதிகை வீரட்டானம்)

கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே.
  ----tirumuRai 4.1.1

Lyrics in Roman script
kUTrAyina vARu vilakkakileer koDumaipala seythana :nAnaRiyEn
ETrAyaDikkE  iravumpakalum piriyAthu vaNanguvan eppozhuthum
tOTrAthen vayiTrin akampaDiyE kuDarODu thuDakki muDakkiyiDa
ATrEnaDiyEn athikaikkeDila veeraTTA naththuRai ammAnE

Listen to the above song here

Meaning in English: Oh lord who dwells in the shrine thiruvatigai vIraTTAnam on the banks of GeDila River, I am not aware of any sins I committed in my current birth. In such a case I have got an intense colic pain in my stomach which is very much incurable and it makes me quite immobile. I can’t bear the pain. It tortures me like the agent of death. Only you can eliminate that misery. If you do that I will worship your holy feet keeping your thoughts in my mind day and night.

கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன். ஏற்றாய் அடிக்கு + . - தேற்றம்.


No comments:

Post a Comment