Sunday, April 7, 2024

கணபதியே கருணாநிதியே----GaNapatiyE karuNAnidhiyE

 

GaNapatiyE karuNAnidhiyE--- கணபதியே கருணாநிதியே

rAgam: Karaharapriya    tALam: Adi

Composer: PApanAsam Sivan


Composer’s Bio: Please visit http://inikkumtamizhisai.blogspot.com/2016/07/thamizh-songs-in-carnatic-music7-enna.html

பல்லவி

கணபதியே கருணாநிதியே கடைக்கண் பார்த்தருளே ஸ்ரீ மஹா (கணபதியே)

அனுபல்லவி

துணையடி தொழும் அன்பர் துயர் துடைக்கும் துய்யா ஸுந்தர

சரணார விந்தத் துதிக்கையா (கணபதியே)

சரணம்

ஸகல  ஸுராஸுரர் பணிமலர்ப் பதனே சங்கரன் உமையும் மனமகிழ் ஸுதனே

ஜகம் முழுதும் நிறை யானை முகவனே தாள் பணிந்தேன் தஞ்சம் நீயே பகவனே

(கணபதியே).

 

Note: The above version is the authentic version obtained from Sivan’s compositions published by his daughter Rukmini Ramani (Cf. http://www.reocities.com/Athens/Acropolis/1428/sivan.pdf   song 3.3). Some musicians sing the Pallavi line as “en kavalaigaL tIrttaruLE” instead of “kaDaikkaN pArttaruLE”. Perhaps they entertain so many worries while coming to the concert or the version handed over to them by their gurus had that phrase, a traditional oversight.

Lyrics in Roman script

pallavi

gaNapatiyE karuNAnidhiyE kaDaikkaN pArttaruLE shrI mahA    (gaNapatiyE)

anupallavi

tuNaiyaDi tozhum anbar tuyar tuDaikkum tuyyA sundara caraNAravinda tudikkaiyA (gaNapatiyE)

caraNam 

sakala surAsurar paNimalarp-padanE shankaran umaiyum manamagizh sutanE
jagam muzhudum niRai yAnai mukhavanE tAL paNindEn tanjam nIyE bhagavanE  (gaNapatiyE)

Meaning:

Pallavi: Oh lord GaNapati, you are a treasurehouse of mercy. Please cast your glance at me.

Anupallavi: You eliminate the misery of your devotees who worship your feet. Your feet are beautiful resembling lotus.

CaraNam: The celestials and the demons worship your flowery feet. Lord Shiva and his consort umA are pleased with you (their son). You pervade all over the universe. You have the elephant face. I worship your feet seeking refuge. You are the one deity I trust.

Audio and video clips

Listen to Sanjay Subrahmanyan   here

Listen to Sriram Gangadharan     here  or  here

Listen to K L Sriram     here

View/Listen to Prasanna Venkatraman   here

View/listen to Surabhi Pusthakam   here

Watch a dance by Sruthi Panchanatham   here


Tuesday, April 5, 2022

மாட்சி மிகுந்த தாயே---mATci mighunda tAyE

 

mATci mighunda tAyE --மாட்சி மிகுந்த தாயே

rAgm: hindOLam   tALam:  rUpakam

Composer:  daNDapANi dEsikar

Composer’s Bio: Please visit https://inikkumtamizhisai.blogspot.com/2017/01/thamizh-songs-in-carnatic-music13a.html

 

Acknowledgement: I thank Subramanian Krishnan for sending me the lyrics for this song.

பல்லவி:

மாட்சி மிகுந்த தாயே மீனாக்ஷி தெய்வம் நீயே அருள்

 

அனுபல்லவி:

காட்சியினால் உன்னைக் காண்பவர்க்கே                                                           

அகக்கண்ணில் நிறைந்து கருத்தில் உறையும்

 

சரணம்:

அல்லும் பகலும் உள்ளம் கனிந்து அன்போடு உன்னைப் பாடி நின்றேன்

எல்லையில்லா இன்பம் தந்து ஏழையேனை வாழச் செய்வாய்

 

Lyrics in Roman script

Pallavi:

mATci mighunda tAyE mInAkshi deyvam nIyE aruL

Anupallavi:

kATciyinAl unnaik kANbavarkkE kaNNil niRaindu karuttil uRaiyum

CaraNam:

allum paghalum uLLam kanindu anbODu unnaip pADi ninREn

ellaiyillA inbam tandu EzhaiyEnai vAzhac cheyvAy

 

Meaning

Pallavi: O, glorious mother goddess mInAkshi , please shower  your grace.

Anupallavi:  Whoever views your image, you fill their  eyes and stay in their thoughts.

CaraNam:  Day and night with deep devotion I sang your glory. Please give me your love and enliven me.

 

Audio links

Listen to K Gayathri   here



Wednesday, September 1, 2021

mADu mEykkum KaNNA--- மாடு மேய்க்கும் கண்ணா

 

mADu mEykkum KaNNA--- மாடு மேய்க்கும் கண்ணா

rAgam: dEsh

Composer: Unknown

 

Background: The scene is a forest where KaNNan (with his friends) used to take the cows to graze. But lots of cowherd women seek him. KaNNan has the habit of deserting them all and going over to the seNbaka forest leaving the gOpis wonder where he is. The cows along with their calves are sad not seeing him or listening to his flute. The lyricist is enamored of the nAlAyira divya prabandham (known as Thamizh vEdam) and imagines that KaNNan desires to hear them recited.

பல்லவி:

மாடு மேய்க்கும் கண்ணா உனது மண்டலமெல்லாம் பெண்ணா?

அனுபல்லவி:

மாடும் கன்றும் வாட கூடும் கோபியர் தேட

நாடி செண்பகவனம் நாடி நீ செல்வதென்ன?

சரணம்:

பாடி பழைய வேதம் தேடி பின்னே வர

தேடி தமிழ் வேதத்தை நாடி நீ செல்வதென்ன?

கூடினாலே இன்பம் கூடினாலே தெரியும்

கோடி கோடி இன்பம் கோபாலனே வருவாய்

 

Lyrics in Roman script

Pallavi:

MADu mEykkum kaNNA unadu maNDalamellAm peNNA?

Anupallavi:

mADum kanRum vADa kUDum gOpiyar tEDa

nADi seNbakavanam nADi nI selvadenna?

CaraNam:

pADi pazhaiya vEdham tEDi pinnE vara

tEDi tamizh vEdattai nADi nI selvadenna?

kUDinAlE inbam kUDinAlE teriyum

kOTi kOTi inbam gOpAlanE varuvAy

 

Meaning: The lyricist wonders if KaNNan's universe is full of women while he is grazing cows. KaNNan has gone over to the seNbaka forest while the cow/calf are sad (not seeing him in their midst) and the gOpis are looking for him too. The old scriptures are following him but KaNNan is going in search of tamizh vEdam (nAlAyira divya prabhandam). If one encounters him there is immense pleasure. Hence the lyricist welcomes KaNNan.

Acknowledgement:

Lyrics contributed by Chandra Sekar (personal communication) and   Kolappan Bagwathi (see the URL  https://www.youtube.com/watch?v=cACHaWEKIIo

Audio/video links

Listen to Madurai Somu sing this   here    and   here





Thursday, April 11, 2019

ராம நாமமே துதி -- rAma nAmamE tudi manamE

ராம நாமமே துதி    -- rAma nAmamE tudi manamE
rAgam: dEsh     tALam:  Adi
Composer: tanjAvUr Sankara Iyer




This kriti is a simple exhortation for devotees to pray to Rama in order to be free of worldly misery.

பல்லவி
ராம நாமமே துதி மனமே க்ஷேமமுறவே நீ தினமே சீதா
அனுபல்லவி
பூமியைப் பொன்னை பூவையரையும் நீ பூஜித்துப்  பின் புண்ணாகாமலே ஸ்ரீ
சரணம்
வாதனைகள் பல சோதனைகள் யாவுமே                                    நாதனை நினைந்திடில் நாடுமோ ரகு
நாதனை நினைந்திடில் நாடுமோ, சீதா


Lyrics in Roman script
pallavi
rAma nAmamE tudi manamE kshEmamuRavE nI dinamE sItA
anupallavi
bhUmiyai ponnai pUvaiyaraiyum nI pUjittup  pin puNNAgAmalE shrI
caraNam
vAdanaigaL pala sOdanaigaL yAvumE nAthanai ninaindiDil nADumO
raghu nAthanai ninaindiDil nADumO, sItA

Meaning:
Pallavi: O, mind, utter the name of “RAma” daily to get his blessings.
Anupallavi: Do not lust after land, gold, and women. That will only make you more miserable in the end.
CaraNam: If you meditate on Rama, all your trials and tribulations will disappear. So chant the name of Rama so that you will not encounter any troubles in your life.

Audio/video links

Listen to Maharajapuram Santhanam   here
Listen to D K Jayaraman   here
Listen to T N Seshagopalan   here    or    here
Listen to Bombay Jayashree    here
Listen to S. Sowmya    here
View/listen to Ranjani Gayathri    here
View/listen to N S Kamakshi     here

Tuesday, February 14, 2017

தோடுடைய செவியன்----tODuDaiya seviyan

தோடுடைய செவியன்----tODuDaiya seviyan
Composer: tirugnAna sambandar(திருஞான சம்பந்தர்)
(tEvAram tirumuRai 1. Padigam 1. Shrine: SIrkAzhi)
பண் : நட்டபாடை     paN: naTTapADai  (rAgam: nATTai)

For a discussion of the various paNs please visit: http://tamizisai.weebly.com/about-pans.html


 


Background:  When the child Sambandar (age 2) was left on the steps of the temple pond when his father went to take a bath, the child got hungry and started crying. At that time it is believed that lord Shiva and goddess PArvati appeared in the sky on the bull mount. The goddess took pity on the child and fed him divine milk. Later when the father came around he saw the child with a gold cup in his hands with milk streaming down his mouth. When he asked the child about who fed him milk the child pointed to the temple tower. But the father could see nothing. He figured it must be the lord and mother goddess. The child sang the following song to clarify that it was the lord and mother goddess who graced him. The child prodigy went on to sing the praise of lord Shiva and spread shaivism all over. He later came to be known as tirugnAna sambandar (திருஞான சம்பந்தர்). In the shaivist religious lore he is known as “god’s son”.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்                           
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்                                      
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த                                      
 பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.   1.1.1

Lyrics in Roman script
tODuDaiya seviyan viDaiyERiyOr tUveNmadi sUDik                           
kADuDaiyasuDa laippoDibUsi en uLLa#ngavar kaLvan                                      
EDuDaiyamala rAnmunainATbaNin tEttaruL seyda                                       
pIDuDaiyabira mAburammEviya pemmAniva nanRE.   1.1.1 


தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

Meaning in EnglishHe is the one who wears the stud in his ear. He sports the crescent moon on his head. He smears the ash from the burning ghat all over his body. He enthralled me.  Lord Brahma who is seated on a lotus prayed to him once to help in the creation of the world. Our lord granted his prayers. He has taken dwelling in this great shrine brahmapuram.

The other nine songs in the same patigam sung in praise of the lord in SIrkAzhi (also known as brahmapuram--- பிரமாபுரம்) are given below. (if anyone wants them transliterated they should send a request to this author via a comment in the blogspot)

முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு                         
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்                    
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப் 
பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.2

நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி                                              
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்                                  
ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்                                              
பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.3

விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்                   
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்                                   மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்                       
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே. 1.1.4

ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன 
அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்                   
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப்                
பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.5

மறைகலந்தஒலி பாடலொடாடல ராகிமழு வேந்தி                                          
இறைகலந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்                        
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்                                
பிறைகலந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.6

சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த                        
உடைமுயங்கும்அர வோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்                     
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்                  
பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.7

வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த                          
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்                       
துயரிலங்கும்உல கிற்ஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம்                            
பெயரிலங்குபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.8

தாணுதல் செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்                                     
நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்                               
வாணுதல் செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப்                                     
பேணுதல் செய்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.9

புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா                               
ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன் 
மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர் மாயம்இது வென்னப்                     
பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.10

அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய                                  
பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை                               
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த                           
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே   
  1.1.11
Audio and video clips
ThiruttaNi Swaminathan OdhuvAr sings here:
View and Listen to T M Krishna here    (gambIranATTai  rAgam; rUpakam  tALam)
To listen to the child singing in the movie (jnAnakkuzhandhai) clip https://www.youtube.com/watch?v=krUrUa7PztA
For the full movie on gnAnasambandar                 https://www.youtube.com/watch?v=tofX0hhLHIQ